பளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..!

0 264

புதுச்சேரிக்கு மற்றுமொரு சிறப்பாக சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் சுத்தமான கடற்கரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி என்றாலே இயற்கை அழகோடு அமைந்த கடற்கரைகள் மற்றும் சுற்றுலா மையங்கள்தான் நினைவுக்கு வரும். இங்கு மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ், ரூபாய் 70 கோடியில் காலாப்பட்டு முதல் நரம்பை உள்ளிட்ட 7 கடற்கரை பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சின்னவீராம்பட்டினம், ஈடன் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் சுத்தமான கடற்கரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்து கடற்கரையில் சிறிய குப்பை கூட இல்லாமல், தூய்மையாக வெண்மணி போன்று பளிச்சென்று பராமரித்து வருகிறது. இதனால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வு எடுக்க நிழற்கூடங்கள், அலங்கார வளைவுகள், குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு பரமரிக்கப்படுகின்றது. இது போன்ற தூய்மையான கடற்கரையை பார்த்ததில்லை என்கிறார் சென்னையைச்சேர்ந்த நரேன்.

5 அதிகாரிகள் தலைமையில், 23 பணியாளர்கள் தினமும் காலை முதல் மாலை வரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பிளாஸ்டிக், கண்ணாடித்துண்டு, பேப்பர் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. 

நகரங்களில் காற்றில் பறக்கும் தூசி, குப்பைகள் கொட்டிக்கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில், சுத்தமான காற்றை சுவாசிக்க கூடிய வகையில் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக ஈடன் கடற்கரை அமைந்திருப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments