அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் அமைப்பு முடிவு

0 265

அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் 30 நாள்களுக்குள் மனு தாக்கல் செய்ய போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அந்த அமைப்பு ஆலோசனை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகிகள், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில், ஏற்கெனவே இருக்கும் மசூதியை வேறு இடத்தில் கட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் ஆதலால் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கும் உச்சநீதிமன்ற முடிவில் உடன்பாடு இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், அது 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்பதை தாங்கள் அறிவோம் என்றும், இருப்பினும் சீராய்வு மனு தாக்கல் செய்வது தங்களது உரிமை என்றும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments