நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

0 263

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், நூற்றாண்டு பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவாலபத்தி எனும் பகுதியில், சுமார் 117 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட “சர்ச் ஆப் காட்” என்ற தேவாலயத்தில், அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மளமளவென பரவிய தீ, அருகில் இருந்த வீட்டிலும் சூழ்ந்து பற்றி எரிந்தது. இதனால் தீ ஜுவாலைகளுடன் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

தீயணைப்பு துறை வருவதற்குள்ளாக பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments