கூகுள் நிறுவனத்தின் டூடுள் போட்டியில் வெற்றி பெற்ற 7 வயது சிறுமி

0 324

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை 7 வயது சிறுமி, கூகுள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட டூடுள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

குழந்தை விரும்பும் எதிர்கால உலகம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற சிறுமி திவ்யான்ஷி, மரங்கள் கால் முளைத்து நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற டூடுளை வரைந்திருந்தார்.

image

அதுகுறித்து விளக்கமளித்த சிறுமி, எதிர்காலத்தில் தீவைக்கப்படுவதிலிருந்தும், வெட்டப்படுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் திறனை மரங்கள் வளர்த்துக் கொள்ளக் கூடும் எனக் கூறினார்.

இதையடுத்து போட்டியில் முதலிடம் பிடித்த சிறுமியின் டூடுள், கடந்த 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று கூகுளின் முகப்பு பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments