போலீஸ் சோதனையில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது

0 128

சென்னையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 11 கிலோ கஞ்சாவுடன் 3 பெண்கள் உள்பட 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெசப்பாக்கத்தில் டாஸ்மாக் மதுபான கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு கஞ்சா விற்றதாக கவுதமன், தர்ஷன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் வடபழனியில் ராஜேஸ்வரி என்பவர் வீட்டில் 1 கிலோ கஞ்சாவும், திருவொற்றியூர் கோதண்டம் என்பவரது வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் ரூபாய் 65 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜேஷ்வரி, நாகம்மாள், லட்சுமி உள்ளிட்ட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து விற்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments