8 வயது மகளை திட்டியதால் தம்பியை கொலை செய்த அண்ணன்

0 505

திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர், மனைவியை பிரிந்து தனது 8 வயது மகள், தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார்.

அவரது தம்பி சம்பத் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாண்டியின் 8 வயது மகள் நந்தினீஸ்வரி வீட்டிற்குள் சிறுநீர் கழித்து விட, கோபமடைந்த சம்பத் கடுமையான சொற்களால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டி சனிக்கிழமை இரவு முழுவதும் மது அருந்தியுள்ளார். அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி சம்பத்தை, போதை தலைக்கேறிய நிலையில் பாண்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

அதில் கழுத்து மற்றும் நெற்றியில் பலத்த காயமடைந்த சம்பத், சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அண்ணன் பாண்டி, திருநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரை கைது செய்த திருநகர் போலீசார், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாதாரண குடும்பத் தகராறுக்காக சொந்த அண்ணனே தம்பியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments