இளம்பெண்ணை தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் கைது

0 465

சென்னை விருகம்பாக்கத்தில், இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்யும் ஒருவரின் மனைவியை, ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் என்ற இருவரும் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், வீடியோ படம் பிடித்து, மிரட்டியதுடன், தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, பெண்ணின் கணவர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்தார்.

அதனடிப்படையில் வடபழனி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நெசப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் மகளிர் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments