பாஜக குதிரைபேரம் - சிவசேனா குற்றச்சாட்டு

0 324

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரைபேரத்தில் பாஜக ஈடுபடுவதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில், கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என நிதின் கட்கரி கூறியது   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசியலிலும் "மேட்ச் பிக்சிங்" செய்ய பாஜக முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று மாலை ஆளுநரை சந்திக்க இருந்த நிலையில், அது தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் மும்பையில் இன்று சந்தித்துப் பேசும் நிலையில், சரத்பவார் நாளை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments