மே.வங்க அரசு கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் சுத்த மோசம்- ஆளுநர் விமர்சனம்

0 164

மேற்குவங்கத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அம்மாநில ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு செல்ல ஹெலிகாப்டர் அனுப்புமாறு மேற்கு வங்க ஆளுநர் கோரிய நிலையில், அதற்கு மாநில அரசு செவி சாய்க்கவில்லை. இதைத் தொடர்ந்து காரில் பயணித்து அங்கு சென்ற ஆளுநர், மாநில சாலைகள் குறித்து விமர்சித்துள்ளார்.

முதலில் தான் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்ததாகவும், அவை நல்ல நிலையில் இருந்ததாகவும் கூறியுள்ள ஜெகதீப் தங்கார், அதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே சமயம் மாநில சாலைகளில் பயணித்த போது தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த பயணத்தின் போது சுமார் 100 கிலோ மீட்டர் வரையிலான மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளில் பயணிக்க நேர்ந்தது. இந்த தூரத்தை காரில் கடந்த போது தாம் ஒரு வழியாகிவிட்டதாக  ஆளுநர் ஜெகதீப் தங்கார் மம்தா தலைமையிலான அரசை விமர்சித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments