இறந்த பாம்பைக் கயிறாக்கி ஸ்கிப்பிங் விளையாடிய சிறுவர்கள்

0 892

வியட்நாமில் இறந்த பாம்பினைக் கொண்டு சிறுவர்கள் ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பு உயிரோடு இருந்தால் மட்டும் அல்ல இறந்து கிடந்தால் கூட அதனை பார்த்து நடுங்குவது மனித இயல்பு. இந்நிலையில் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சில சிறுவர், சிறுமியர் ஸ்கிப்பிங் விளையாடியது தொடர்பான வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

வியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் சில சிறுவர்கள்  விளையாடுவதற்கு ஏதும் கிடைக்காமல் சுற்றித் திரிந்தனர். அப்போது அப்பகுதியில் பாம்பு ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டனர். இறந்த பாம்பை கண்டு, சிறுவர் பட்டாளம் சிறிதும் பதற்றப்படவில்லை. மாறாக தங்களுக்கு விளையாட அருமையான பொருள் ஒன்று கிடைத்து விட்டது என்றெண்ணி உற்சாகமடைந்தனர்.

ஆரவாரத்துடன்  இறந்த பாம்பை கையில் எடுத்த அவர்கள், கயிறுக்கு பதிலாக பாம்பின் உடலை கொண்டு ஸ்கிப்பிங் விளையாட தீர்மானித்தனர். இவர்களது இந்த செயலை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

அதில் இறந்த பாம்பின் உடலை ஒரு சிறுவனும், சிறுமியும் இரு முனைகளை பிடித்து சுழற்ற நடுவில் நின்றிருந்த சிறுமி உற்சாகமாக துள்ளி குதித்து ஸ்கிப்பிங் ஆடுகிறாள். எதை பற்றியும் கவலைப்படாமல் இறந்த பாம்பின் உடலை வைத்து வாண்டுகள் அடித்த லூட்டியை, வீடியோ பதிவு செய்த பெண், அவர்களுக்கு உற்சாக மூட்டுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments