சபரிமலை தீர்ப்பு உச்சநீதிமன்றம் விளக்கம்..!

0 782

பரி மலை கோவில் நடை நாளை திறக்கப்படுவதால் பாதுகாப்பு காரணங்களை ஒட்டி, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வரவேண்டாம் என கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில், பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து பெண்களும் வழிபடலாம் என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ள அதே நேரத்தில், சீராய்வு மனுக்கள் 7 நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நாளை திறக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தர இயலாது என்றும், நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு சிக்கலானது எனத் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராய் விஜயன். நீதிமன்ற தீர்ப்பின் படி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் வர முயன்றால் நிலைமையை எப்படி கையாள்வது என, உத்தரவில் தெளிவாக சொல்லப்பட வில்லை என்றார்.

உச்சநீதிமன்ற உத்தரவு மாநில அரசுக்கு அதிக பிரச்னையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக சில பெண்களுக்கு பாதுகாப்பு அளித்ததால் கடுமையான சூழல் உருவானதை சுட்டிக் காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments