மகாத்மா காந்தி, தற்செயலான காரணங்களால் தான் உயிரிழந்தார் -கைப்பிரதியில் சர்ச்சை கருத்து

0 219

ஒடிசா அரசு, பள்ளி மாணவர்களுக்கு விநியோகித்த கைப்பிரதியில் மகாத்மா காந்தி, தற்செயலான காரணங்களால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, "நமது தேசப்பிதா; ஒரு பார்வை" என்ற தலைப்பில், ஒடிசா அரசு கைப்பிரதியை வெளியிட்டது.

அதில், காந்தி மரணம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து இடம்பெற்றது. இந்த கைப்பிரதிகள் திரும்பப்பெறப்படும் என்றும், காரணமானவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒடிசா அரசு உறுதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments