சபரிமலை வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது...அமைச்சர் திட்டவட்டம்..!

0 574

பரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு செல்ல 133 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள நிலையில், அது குறித்து பேசிய கேரள அரசின் தேவசம்போர்டு அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன், சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும், அதுவரை கோயிலுக்குள் பெண்கள் வருவதை அரசு ஆதரிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடையை மீறி வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்தார். அதேநேரம் நீதிமன்ற அனுமதி பெற்ற பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments