கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு செலவினம் சரிவு

0 411

இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நுகர்வோரின் உணவு செலவினம் குறைந்திருப்பதாக, தேசிய புள்ளி விவர அலுவலகம் மூலம் தெரிய வந்துள்ளது.

2017-2018 கால கட்டத்தில், ”இந்தியாவில் வீட்டு நுகர்வோர் செலவு” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் நுகர்வோரின் செலவினம் சராசரியாக 3 புள்ளி 7 சதவீதம் குறைந்திருப்பதாகவும், கிராமப்புறங்களில் உணவு உண்பது 10 சதவீதம் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1973- க்கு பிறகு நுகர்வோர் செலவினத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாக இது கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments