நவீன நடைபாதை... மக்கள் வரவேற்பு...

0 401

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதுபொலிவு பெற்றுள்ள பாண்டிபஜாருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பொலிவுறு நகரம் திட்டத்தின் மூலம் திநகர் பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் 58 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை வளாகமும், மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சாலைகளும் அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திறந்துவைத்தார்.

அகலப்படுத்தப்பட்ட நடைபாதை, அமருவதற்கு வண்ண இருக்கைகள், அழகூட்டும் விளக்குகள், பாண்டிபஜாரினுள் எந்த இடத்திலும் ஏறி இறங்க இலவச பேட்டரி கார்கள், சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்த தனி இடம், ஒரு வழிச்சாலை என பாண்டிபஜாரின் முகமே மாறியுள்ளது.

நடந்து செல்வதற்கு எளிமையாகவும், சுத்தமாகவும் இருப்பதாகவும் அங்கு வந்தவர்கள் தெரிவித்தனர். இதே நிலை என்றும் தொடர அரசு முறையாக பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அப்பகுதியை பராமரிப்பது அரசின் கடமை என்றாலும், அங்குள்ள வணிகர்களும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இலவச பேட்டரி கார்கள் இயக்கப்படுவதால், ஆட்டோக்களை தேட வேண்டிய அவசயமின்றி இருப்பதாக முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.

குப்பை கூளங்களைப் போட்டு அசுத்தமாக்கிவிட்டு, பராமரிப்பு சரியில்லை என அரசை சுட்டிக் காட்டாமல், பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments