தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

0 496

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில்  நேற்று மழை பெய்துள்ள நிலையில், 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ராயப்பேட்டை, அண்ணாநகர், கிண்டி, அசோக்நகர், வடபழனி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்துள்ளது. இதனால் இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. நாகை,வேளாங்கண்ணி,நாகூர்,கீழ்வேளூர்,கருவேலங்கடை,திருப்பூண்டி ,விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்றிரவு திடீரென கனமழை பெய்தது. கொடநல்லூர், சேதராகுப்பம், கீழ்சாத்தமங்கலம், மாம்பட்டு,மும்முனி, அம்மையப்பட்டு, வெண்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்,ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு மழை பெய்தது.

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதே போல் உள்மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments