நிர்பயா வழக்கில் முக்கிய சாட்சி பணத்திற்காக பொய் கூறுகிறார்

0 237

நிர்பயா வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள நபர் பணத்தைப் பெற்றுக்கொண்டு பொய்யான தகவலை அளிப்பதாக, பவன்குமார் என்ற குற்றவாளியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் என்பவரின் தந்தை ஹிராலால்குப்தா, டெல்லி ஆர்.கே. புரத்தில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக விளங்குபவர் பொய்யர் என்றும், அவர், பணத்தை பெற்றுக்கொண்டு ஊடகங்களுக்கு, தவறான தகவல்களை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments