பொது சுகாதார சேவைகள் வழங்குவதில், தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி

0 176

நாட்டிலேயே பொது சுகாதார சேவைகள் வழங்குவதில், தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்வதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இதை கொடியசைத்து தொடங்கி வைத்து பின்னர் பேசிய அமைச்சர், ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, 20 ஆயிரம் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் மூலம், காய்ச்சல் தடுப்பு, தொற்றுநோய் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சிறந்த 3 மாணவ சுகாதார தூதுவர்களுக்கும்,
மாண்டிசோரி கல்வி பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments