சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கம்

0 246

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை தொடங்கி வரும் ஜனவரி 20ம் தேதி வரை அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து 55 பேருந்துக்களும், திருச்சி, மதுரை, புதுவை ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com உள்ளிட்ட இணையதள முகவரிகள் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பேருந்துகள் பற்றிய விவரங்களையும்
9445014412, 9445014450, 9445014424, 9445014463, 9445014416 உள்ளிட்ட செல்போன் எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments