நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த சென்னை மாணவர்கள்- குடியரசு தலைவர் பரிசு

0 277

நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த மாணவர்கள் 3 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பரிசு வழங்குகிறார்.

சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் விஷால், சுதர்சன், சுஷில் ஆகியோர் கடந்த ஆண்டு நவீன வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தனர். கள்ள ஓட்டு போட முடியாத அளவுக்கு ஆதார் எண், கைரேகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மேலும் ஒரு வாக்காளர் எந்த இடத்தில் இருந்தாலும், தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கான வசதியையும் மாணவர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் மாணவர்களின் கண்டுபிடிப்பை பாராட்டி, அவர்கள் 3 பேருக்கும் குடியரசு தலைவர் டெல்லியில் வைத்து இன்று பரிசுகளை வழங்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments