உலக தரம் மற்றும் நீரிழிவு நோய் நாள் இன்று கடைபிடிப்பு

0 104

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கண்காட்சி, உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலக நீரிழிவு நோய் தினம் மட்டும் அல்லாது தர நாளும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி கலந்து கொண்டார். அப்போது உலக தர நாள் தொடர்பாக உறுதிமொழியேற்கப்பட்டது.இதைத் தொடர்ந்து நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

உணவை தயாரித்த மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள் இன்று முதல் மாற்றப்படுவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments