உலக வங்கி தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை

0 159

அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகளை பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், உலக வங்கி செயல் இயக்குநர் அபர்ணா, தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் உலக வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக நேற்று சர்வதேச நிதி நிறுவன அலுவலகத்துக்கு சென்ற துணை முதலமைச்சர், தமிழகத்தின் பொது நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் சர்வதேச நிதி நிறுவனத்தின் செயல் இயக்குநர் சுர்ஜித்பாலா, மூத்த ஆலோசகர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments