’பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சி - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

0 132

’பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பத்து லட்சம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பத்து லட்சம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளிக் கலவித்துறை சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments