மிதக்கும் நகரம் வெனிஸ் வெள்ளத்தில் மூழ்கியது

0 334

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

image

இதன் காரணமாக கடந்த 1,200 ஆண்டுகளில் புனித மார்க்ஸ் பஸிலிக்கா 6வது முறையாக நீரில் மூழ்கியுள்ளது.

ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த நகரின் அவசரகால சேவைக் குழு ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி 78 வயதான முதியவர் ஒருவர் அலைவீச்சில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் எனத் தெரிகிறது.

image

மீட்புக்காக கூடுதலாக நீர்வழி ஆம்புலென்ஸ் படகுகள் அப்பகுதியில் பணியாற்றுகின்றன. வெனிஸ் நகரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 187 சென்டிமீட்டர் கனமழை கொட்டித் தீர்த்ததால் மிதக்கும் நகரம் எனப் பெயர் கொண்ட வெனிஸ் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments