டெல்லியில் காற்று மாசு குறையாததால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

0 287

டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 4 ஆம் தேதி காற்று மாசு மிகத் தீவிரம் என்ற அளவிற்கு 500 புள்ளிகளைக் கடந்த நிலையில், 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

விடுமுறை முடிந்து 3 நாட்களாக பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு காற்று மாசு 400 புள்ளிகளைக் கடந்து தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக 14 மற்றும் 15 ஆம் தேதி டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க, விவசாய கழிவுகளை, இயற்கை எரிவாயுவாக மாற்றும் ஆலைகளை அமைக்க வேண்டும் என்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments