மாவோயிஸ்ட் மணிவாசகம் உடலை பிணவறையில் பாதுகாக்க உத்தரவு

0 467

கேரள போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சேலம் அரசு மருத்துவமனை, பிணவறையில் பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண்பதற்காக, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் சகோதரி கலா ஆகியோருக்கு 30 நாள் பரோல் வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிவாசகத்தின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிணவறையில் பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சேலம் காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments