3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

0 257

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டெல்லியில் உள்ள குருத்வாராவில் ரொட்டி தயாரித்தார். சீக்கிய குரு குருநானக்கின் 550வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவும், பருவ நிலை மாற்றம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவும் 3 நாள் பயணாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டெல்லி வந்துள்ளார்.

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சென்ற அவர், மின்சாரத்தில் இயக்கக்கூடியோ ஆட்டோ ரிக் ஷாவை ஓட்டினார்.

தொடர்ந்து பங்ளா சாகிப் குருத்வாராவில் நடைபெற்ற குருநானக்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள உணவு கூடத்தில் ரொட்டி தயாரித்தார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 10வது முறையாக இந்தியா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments