காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு - நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 286

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கினை உடனடியாக விசாரிக்க உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக விசாரிக்குமாறு புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி திரிபாதி உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதாகவும், அதனடிப்படையில் உள்துறை செயலாளர் ஆணையிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காதது விசாரணையை தாமதப்படுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளார் உத்தரவிட்டும்  கோப்புகளை ஏன் மூட்டை கட்டி வைத்திருக்க வேண்டுமென்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்று தருவதோடு, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments