தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்த நபர் கைது

0 385

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்த வழக்கில், தலைமறைவாக இருந்துவந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

2011ஆம் ஆண்டில், வேளாண் துறை அமைச்சராக இருந்த சரத் பவார், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, அத்தியாவசிய பொருட்களின் விலையை  கட்டுப்படுத்தத் தவறியதாக கூறி, அரவிந்தர் சிங் எனும் நபர், சரத் பவாரை கன்னத்தில் அறைந்தார்.

அரவிந்தர் சிங் மீது, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், விசாரணையின்போது அவர் மாயமானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த நிலையில், டெல்லி போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments