பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

0 244

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் சென்றடைந்துள்ளார்.

இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய 5 பெரிய பொருளாதார நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. 11ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதாக, தலைநகர் டெல்லியிலிருந்து நேற்று பிற்பகலில் பயணமான பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி நாட்டின் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர், அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்த பிரதமர், இந்திய நேரப்படி, இன்று பிற்பகல், 2 மணியளவில், பிரேசில் தலைநகர் பிரசிலியா விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரிக்ஸ் மாநாட்டில், தொடர்ந்து 6ஆவது முறையாக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ ஆகியோரை தனித்தனியே சந்தித்து, பரஸ்பர உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments