காற்று மாசு வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 154

காற்று மாசுபாட்டை குறைக்கும் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் குறித்து, டிசம்பர்.3-க்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உட்பட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, காற்று மாசுபாட்டை குறைக்க ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டுமென தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிய ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாட்டை தீர்க்க கூடிய ஹைட்ரஜன் எரிபொருள் தொடர்பான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக கூறினர்.

இதையடுத்து, டிசம்பர்.3-ம் தேதிக்குள் இதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments