சபரிமலை மற்றும் ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு..!

0 500

பரிமலை விவகாரம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான 2 வழக்குகளில், நாளை காலை தீர்ப்பளிக்கப்படும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிவுற்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலை வழக்கின் தீர்ப்பை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நாளை காலை 10.30 மணிக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தொடரபட்ட சீராய்வு மனுக்கள் மீதும், ரபேல் விவகாரத்தில் பிரதமர் குறித்து கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கிலும், நாளை தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments