கோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல்...

0 522

சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 10 டன் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் 100க்கும் மேற்பட்ட வாழைப்பழ மொத்த விற்பனை அங்காடிகள் உள்ளன. அங்கு விற்பனை செய்யப்படும் வாழைப்பழங்கள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. இதனை அடுத்து, மாநில உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடியாக பரிசோதனை மேற்கொண்டனர்.

image

அப்போது அங்குள்ள 10 கடைகளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பழங்களை பழுக்க வைக்கும் சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவையும் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டன.

இச்சோதனையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர்.ராமகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். பின்னர் பேசிய உணவுத்துறை அதிகாரிகள், இந்த பரிசோதனை தொடரும் என்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயனம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments