பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

0 425

வானிசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பவானிஆறு மற்றும் மாயாற்றின் வழியாக பவானிசாகர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணைக்கு வரும் 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் அணையின் மேல்மதகுகள் வழியாக பவானிஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.மேலும் வருவாய், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறைக்கு அவ்வவ்போது தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பவானிகரையோரம் உள்ள முனியப்பன் கோவில் வீதி, மத்திமரத்துறை. பிள்ளையார் வீதி, ஐயப்பன் கோவில் வீதி, சின்னவீதி ஆகிய பகுதியில் ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்றிரவு 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர்வரத்து 10ஆயிரத்து 200 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 10ஆயிரத்து 200 கனஅடியாகவும், அணையில் நீர் இருப்பு 32 புள்ளி 8 டிஎம்சியாகவும் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments