பயணிகள் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 16 பேர் பலி

0 422

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர்.

தோடா மாவட்டத்தில் 17 பேரை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று, மர்மத் எனுமிடத்தை நோக்கி சென்றது. அப்போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த வாகனம் சுக்குநூறாக சிதைந்தது. அதில் இருந்த 16 பேர் உடல் நசுங்கி பலியாகினர். ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து வந்து காயமடைந்த நபரை மீட்டு ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments