விஷவாயு தாக்குதலிலிருந்து தப்பிக்க... வழிகாட்டும் தீயணைப்புத்துறை...

0 201

கழிவுநீர் தொட்டியை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வது சட்டவிரோதம் எனக் கூறியிருக்கும் தீயணைப்புத்துறை, விஷவாயு தாக்குதலிலிருந்து தப்பிக்க, லாந்தர் விளக்குகளை கொண்டு கண்டறியும் நுட்பங்கள் உள்ளிட்ட வழிமுறைகளையும் கூறியிருக்கிறது. 

கழிவுநீர் தொட்டியை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்ற விதி இருந்தும், அதையும் மீறி, ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களால், விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு விஷவாயு தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை தீயணைப்புத்துறை வழங்கியிருக்கிறது.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு இருக்கிறதா? என்பதை, லாந்தர் விளக்கு உள்ளிட்ட நுட்பங்கள் மூலம் கண்டறியலாம் என தீயணைப்புத்துறை கூறியிருக்கிறது. கழிவுநீர் தொட்டியில் இறங்கியவர் விஷவாயுவால் தாக்கப்பட்டு நிலைகுலைந்தால், அதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நேரடி மீட்பு பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் தீயணைப்புத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.

பெரிய நிறுவனங்கள் உட்பட அனைவரும், எந்திரங்கள் மூலமே கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், மனிதர்களை ஒருபோதும் ஈடுபடுத்தக் கூடாது தீயணைப்புத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments