அழையா விருந்தாளியாக வந்த எலியால் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்

0 362

ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்படத் தயாரான ஏர் இந்தியா விமானம், அழையா விருந்தாளியாக வந்த எலியால் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டிணம் புறப்படத் தயாரான  விமானத்தில் எலி ஒன்று புகுந்துள்ளது.

அதனைப் பார்த்த விமான ஊழியர்கள், கட்டுப்பாட்டு அறைக்கு தகவலளிக்கவே அந்த எலியை பிடிக்கும் வரை விமானம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

அதிகாலை 6.10 மணியளவில் புறப்பட வேண்டிய விமானம், எலியை பிடித்த பின்னர் சுமார் 12 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

விமானம் தாமதமானதற்கான காரணம் குறித்து பயணிகளுக்கு உரிய தகவல் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments