நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்

0 647

நடிகர் அதர்வா நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாக, இ.டி.சி. எக்டேரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை நடத்திவரும் தயாரிப்பாளர் மதியழகன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், "செம போத ஆகாதே" என்ற பெயரில் நடிகர் அதர்வா தயாரித்து நடித்த படத்தை வெளியிட, தம்மிடம் 5 கோடியே 59 லட்ச ரூபாய் பெற்று கொண்டு, அவுட்ரைட் ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

தன்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு படம் வெளியிடுவதில் காலதாமதம் செய்ததால் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் சங்கத்தில் அளித்த புகாரை அடுத்து, விஷால் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமக்கு ஏற்கனவே ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக, இன்னொரு படம் நடித்துத் தருவதாக அதர்வா வாக்களித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக, தன்னிடம் முன்பணமாக 45 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்ட பிறகு, படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று நடிகர் அதர்வா தெரிவித்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments