வீடற்றவர்களுக்காக பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை நிறுவிவரும் அமேசான்

0 331

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பிரபல ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான், வீடற்றவர்களுக்காக பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை நிறுவி வருகிறது.

அமெரிக்காவில் சுமார் 12 ஆயிரம் பேர் தங்கும் இடமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் அமேசான் நிறுவனம் மேரிஸ் ப்ளேஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, சியாட்டல் நகரில் 8 அடுக்கு குடியிருப்பு ஒன்றை நிறுவி வருகிறது.

இந்த குடியிருப்பு அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதில், 30 குடும்பங்களுக்கான தனி அறைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம், மருத்துவ வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக இதற்காக பயனாளர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப் போவதில்லை என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments