செல்போன் சேவை முறையில் கஞ்சா விற்பனை

0 344

சென்னை தரமணியில் செல்போன் சேவை முறையில் கஞ்சா விற்பனை செய்ததாக ஐஐடி ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் தொடர்புகொண்டால் சென்னையில் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா டெலிவிரி செய்யப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், கஞ்சா டெலிவரி செய்யும் நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக, கஞ்சா கிடைப்பதாக கூறப்படும் செல்போன் நம்பருக்கு போலீசார் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல பேசியுள்ளனர்.

இதை அடுத்து அந்த நபர் கூறியபடி, சோழிங்கநல்லூர் சென்ற போலீசார், கஞ்சா டெலிவிரி செய்ய வந்த டோனி என்பவனை பிடித்ததாகவும் அவன் அளித்த தகவலின் பேரில் கஞ்சா விற்க சொன்னதாக ஐ.டி. ஊழியர் கமலகண்ணன் மற்றும் சென்னை ஐஐடி ஊழியர் அரவிந்தை தரமணியில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, எடை இயந்திரங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments