பெண்ணை வீட்டருகில் இறக்கிவிட்ட ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிய பெண்ணின் உறவினர்கள்

0 948

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெண் ஒருவரை அவரது வீட்டருகில் இறக்கிவிட வந்த ஆண் நண்பரை, அந்த பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது ஆண்நண்பர் காரில் அழைத்து வந்து அவரது வீட்டருகில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.

இதனை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள், காரை மடக்கிப் பிடித்து அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற இளைஞர் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அதே காரில் மீண்டும் பெண்ணின் வீட்டருகே வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது காரை மடக்கிய பெண்ணின் உறவினர்கள், அதிலிருந்தவர்களை சரமாரியாக தாக்கியதோடு, காரையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments