டெண்டுல்கரின் 30 ஆண்டு சாதனையை முறியடித்த இளம் வீராங்கனை

சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை இளம் கிரிக்கெட் வீராங்கனை முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கெற்று விளையாடி வருகிறது. முதல் டி-20 கிரிக்கெட் போட்டி, செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.
இதில், களமிறங்கிய இந்திய வீராங்கனை சஃபாலி வர்மா (Shafali Verma) 49 பந்தில் 73 ரன்கள் குவித்தார். 15 வயதான அவர், முதல் அரை சதம் அடித்ததன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், தனது 16-வது வயதில் முதல் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது. அவரது சாதனையை தற்போது முறியடித்துள்ள சஃபாலி வர்மாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Comments