ஈராக்கில் அரசுக்கு எதிராக வலுத்துவரும் போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

0 199

ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் பாக்தாத் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. 

பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல்வேறு காரணங்களால் கடந்த ஒரே மாதத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments