கடலில் சிக்கித் தவித்த 8 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

0 279

புல்புல் புயல் காரணமாக, படகு கவிழ்ந்ததால், கடலில் தத்தளித்த ஒடிஷா மீனவர்கள் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஒடிஷா மாநிலம் பத்ராக் (Bhadrak) பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

அப்போது புல்புல் புயல் காரணமாக அவர்களது படகு கவிழ்ந்தது. அங்கிருந்து நீந்திச் சென்ற மீனவர்கள் கலிபாஞ்சா திஹா (Kalibhanja Diha) தீவில் சிக்கித் தவித்தனர்.

பேரிடர் மீட்புப் படையினருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மீனவர்களை கண்டுபிடித்து, பத்திரமாக மீட்டு கடற்கரைக்கு கொண்டுவந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments