ரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம் என ரோகித் சர்மா வேண்டுகோள்

0 427

ரிஷப் பந்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட ரிஷப் பந்த், ஸ்டம்புக்கு முன்னால் பந்தைப் பிடித்து, ஸ்டம்பிங் செய்தார். அவரது இந்தச் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் களத்தில் என்ன செய்ய விரும்புகிறாரோ அதற்கு நாம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ரிஷப் பந்த் குறித்து பலர் பேசிக் கொண்டிருப்பதாகவும், அவரை சுதந்திரமாக விட்டு விடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ரிஷப் பந்த் பயமறியா இளம் வீரர் என்றும் அவர் மீதான பார்வையை விலக்கினால் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments