சேலத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் தெருக்களில் வெள்ளம்

0 396

சேலத்தில் இரவு முதல் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

சேலத்தின் தாழ்வான பகுதிகளான பச்சப்பட்டி, நாராயண நகர், கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, ஏடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.

அழகாபுரம் பகுதியில் உள்ள சாரதா கல்லூரி முழுவதும் மழை நீர் சூழ்ந்து ள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் அருகே உள்ள செங்கல் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறிவருகிறது.

இங்கிருந்து வெளியேறும் நீர் அணை மேடு கால்வாய் வழியாக திருமணி முத்தாறில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததையடுத்து, கரையின் ஒரு பகுதியை உடைத்து வெள்ளத்தை வெளியேற்றினர். ஆனந்தா பாலம் அருகே கட்டப்பட்டுவந்த தரைப்பாலத்தின் கரைப்பகுதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments