மின்சாரத்திற்கு மாற்றாக ஹைட்ரஜனால் இயங்கும் கார் தயாரிப்பு

0 671

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை வடிவமைத்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, தற்போது மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. 

இந்த நிலையில், தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. மின்சார பேட்டரிகளை விட ஹைட்ரஜன் செல் வாகனங்களுக்கு அதிக திறனைத் தருகின்றன.

மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாக வகையிலும் உள்ளது. அதிக தூரம் பயணிக்கக்கூடிய, பேருந்து, சரக்கு வாகனங்கள், போன்றவற்றிற்கும் இதனை பயன்படுத்த இயலும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments