போர் வீரர்கள் நினைவிடத்தில் ரோஜாக்களை கொண்டு கூடு கட்டிய புறா

0 655

ஆஸ்திரேலியாவில் போர்வீரர்கள் நினைவிடத்தில் ரோஜாக்களை கொண்டு, புறா ஒன்று கூடு கட்டியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பெர்ரா நகரிலுள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ரோஜாக்களை வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம். இதை கண்ட புறா ஒன்று, அந்த ரோஜாக்களை ஒவ்வொன்றாக வாயில் எடுத்து சென்று, நினைவிட மேற்பகுதியில் கூடு அழகாக கட்டியுள்ளது.

புறாவின் இந்த செயலைக் கண்ட நபர் ஒருவர், அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். முதலாம் உலகபோர் நிறைவை குறிக்கும் தினம், ஆஸ்திரேலியாவில் 11ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் போர் வீரர்கள் நினைவிடத்தில் ரோஜாக்களை கொண்டு புறா கூடு கட்டியுள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments