சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 255

அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, 2 மாதங்களாக குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்ததில், சாட்சிகள் பிறழ்சாட்சியம் அளித்ததால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானது தெரியவந்ததாக குறிப்பிட்டனர்.

போக்சோ சட்ட வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்டோர் உட்பட பலரின் வாக்குமூலத்தை ஆடியோ/ வீடியோவில் பதிவு செய்வதாகவும், அதுபோல அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை  பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்,  சில விளக்கங்களை பெற வேண்டியதுள்ளதால், போலீஸ் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments