கும்முரு டப்பர.. புள்ளிங்கோவை கும்மிய போலீஸ்..!

0 1114

கடலூரில் அரசு பேருந்தை மறித்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது படுத்துக் கொண்டு டிக்டாக்கில் திறமை காட்டிய இளைஞர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கி உள்ளார். டிக்டாக் வீடியோ மூலம் வலிந்து  சிக்கி வாகனத்தை பறி கொடுத்த இளைஞரின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... 

image

ரவுத்திரம் பழகுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையில் நின்ற பேருந்தை மறித்து தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதில் படுத்துக் கொண்டு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... என்ற பாடலுக்கு டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் வைரலான நிலையில், இதை பார்த்து மற்ற இளைஞர்களும் இது போல செய்ய தொடங்கி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஆபினவ், சம்பந்தப்பட்ட டிக்டாக் இளைஞரை பிடிக்க உத்தரவிட்டார்.

தன்னுடைய இரு சக்கரவாகனத்தில் டிக்டாக் செய்தபடியே கெத்தாக சுற்றிவந்த இளைஞர் அஜீத்தை, இருசக்கரவாகனத்துடன் கொத்தாக தூக்கிச்சென்றனர்  ராமநத்தம் காவல்துறையினர். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் ரவுத்திரம் பழகியதால் கனத்த இதயத்துடன் கலங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அஜீத்குமார்.

image

பெண்களை கவர்வதற்காக டிக்டாக்கில் கும்மர டப்பர குத்தாட்டம் போட்டவரை கும்மிய போலீசார் அஜீத் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

image

இவர் இதற்கு முன்பும் இது போல விபரீத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு சிறுவன் முன்னிலையில் மின் விசிறியில் தூக்கிட்டு கொள்வதை போல டிக் டாக் செய்துள்ளார்.

image

இவரது குடும்பத்தினர் உதவியுடன் பச்சிளம் குழந்தையை பாயில் படுக்க வைத்து, அதற்கு  மேலே ஆபத்தை விளைவிக்கும் வகையில் கயிற்றில் தொங்கியபடி விபரீத டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

டிக் டாக்கில் நடிப்பு திறமை காட்டுவதாக நினைத்து இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டதால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை போலீசாரிடம் பறி கொடுத்துவிட்டு பரிதாபமாக ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது இந்த கிராமத்து கலைக்குயில்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments